‘இந்தாங்க வீட்டுச் சாவி’... ‘கணவரின் காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ந்துபோய் நின்ற போலீசார்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 03, 2019 04:22 PM

மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், ஆத்திரத்தில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband who murdered his wife due to family issue

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடராம் அருகே உள்ள குலசேகரன் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (41). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (36).  அங்குள்ள அங்கன்வாடியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளநிலையில், லட்சுமணின் குடிப்பழக்கத்தால், தம்பதிகளிடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் தனது மனைவி மகேஸ்வரி,  உறவினர் ஒருவரிடம் அடிக்கடி செல்ஃபோனில் பேசி வந்ததால், அவர்மீது உள்ள சந்தேகத்தால் தகராறு வந்த வண்ணம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு, தம்பதி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.

மதியவேளையில் குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தநிலையில், கணவன் மனைவிக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த லட்சுமணன் அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த மகேஸ்வரி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து வீட்டை பூட்டிவிட்டு நேராக ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் கணவர் லட்சுமணன் சரணடைந்துள்ளார்.

அங்கு போலீசாரிடம் வீட்டின் சாவியை ஒப்படைத்துவிட்டு, மனைவியை கொலை செய்தாக கூறி போலீசாரை அதிரவைத்துள்ளார் லட்சுமணன். அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, லட்சுமணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர். தற்போது இரண்டு குழந்தைகளும் தாய், தந்தை இல்லாது தவித்து வருகின்றனர்.

Tags : #TUTICORIN #TAMILNADU #MURDERED #HUSBAND #WIFE