‘பக்கத்து வீட்டில் வந்த அலறல் சத்தம்’... ‘ஓடிச் சென்று பார்த்த’... ‘பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 21, 2019 08:41 PM

திருப்பூரில் இளைஞர் ஒருவர், பக்கத்து வீட்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sexual harassment to 4 year old child in tiruppur

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் வசித்து வருவபர் கந்தசாமி (34). அங்குள்ள பனியன் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவரும் இவர், காலையில் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். வீட்டில் வேறு யாரும் இல்லாத நிலையில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு 4 வயது சிறுமியை, தனியே அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் தேடியபோது, கந்தசாமியின் வீட்டிலிருந்து, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது சிறுமியை பாலியல்ரீதியாக, கந்தசாமி துன்புறுத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், கந்தசாமியை மரத்தில் கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கினர். தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடமிருந்து கந்தசாமியை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUAL #ABUSE #HARASSMENT #TIRUPPUR #YOUTH #4 YEAR CHILD #TAMILNADU