‘திமுக - அதிமுக வெற்றி யாருக்கு?’.. ‘இன்று ராதாபுரம் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை’.. ‘சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 04, 2019 09:48 AM

ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Postal votes EVMs for Radhapuram poll sent for recounting

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கடைசி 3 சுற்றுகளில் பதிவான வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனவும், செல்லாதென அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகள் 1996ஆம் ஆண்டு அரசாணைப்படி செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் செல்லாது என அறிவிக்கப்பட்ட தபால் வாக்குகளையும், கடைசி 3 சுற்று வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து இன்பதுரை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தபால் வாக்குகளையும், கடைசி 3 சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்கு எந்திரங்களையும் நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  இன்று காலை 11.30 மணிக்கு தலைமை பதிவாளர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதன்பின்னர் அவர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக தபால் வாக்குகள் உள்ள பெட்டி மற்றும் 3 சுற்றுக்கான 36 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆகியவை துணை ஆட்சியர் பால்பாண்டி தலைமையில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளன.

Tags : #RADHAPURAM #ELECTION #VOTES #RECOUNTING #DMK #ADMK #CHENNAI #HC #HIGHCOURT #POSTAL #EVM