'கர்ப்பிணி' மனைவிக்கும் தனக்கும்..ஒரே அப்பாவா?..'அதிர்ந்து' போன வாலிபர்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Manjula | Oct 01, 2019 01:57 PM
காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவி தனது ஒன்றுவிட்ட சகோதரி என தெரிய வந்ததால்,கணவர் அதிர்ச்சியடைந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.அதில் நானும்,எனது மனைவியும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து திருமணம் செய்துகொண்டோம்.தற்போது என் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார்.அவருக்கு டி.என்.ஏ டெஸ்ட் செய்து பார்த்தோம்.அதில் அவர் எனது ஒன்றுவிட்ட சகோதரி என்பது தெரியவந்தது.எனக்கும் அவருக்கும் ஒருவர் தான் தந்தை.
பிறகு தனித்தனியாக இந்த டெஸ்டை செய்துபார்த்து உண்மையை தெரிந்து கொண்டோம்.எனது அம்மாவும், எனது மனைவியின் அம்மாவும் தந்தை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.இந்த உண்மை தெரிந்த பிறகு எங்கள் உள்ளுணர்வில் எந்த மாற்றமும் இல்லை.எங்களை யாரும் பிரிக்க நான் விடமாட்டேன்.எனினும் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?என்று பயமாக இருக்கிறது.தற்போது நாங்கள் என்ன செய்வது?என,மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்.
இதற்கு எக்கச்சக்கமானோர் பதில் அளித்துள்ளனர். அதில் ஒருவர் நீங்கள் இன்னும் அன்பு செலுத்துகிறீர்கள் என்றால் பிரச்சினை இல்லை.ஒன்றாக இருங்கள். குழந்தையை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மற்றொருவர் இது உங்கள் அம்மாக்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள் என ஆலோசனை கூறியுள்ளார்.
