‘10 வயதே ஆன சொந்த பேரனை’.. ‘கை, கால்களை கட்டி’.. ‘கொடூரமாகக் கொலை செய்த பாட்டி’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 25, 2019 11:34 AM

10 வயதே ஆன சொந்த பேரனை பாட்டியே நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka After woman elopes her mother kills grandson

கர்நாடக மாநிலம் மண்டியாவிலுள்ள கிருஷ்ணராஜ பட்டியைச் சேர்ந்தவர் சாந்தம்மா (65). இவருடைய மகள் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில் முதல் திருமணத்தின் மூலம் அவருக்குப் பிறந்த மகனான ப்ரஜ்வால் (10) சாந்தம்மாவிடம் வளர்ந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரால் சிறுவனை வளர்க்க முடியாத சூழல் ஏற்பட மகளிடம் பேரனை வந்து அழைத்துச் செல்லுமாறு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆனால் அவருடைய மகள் தொடர்ந்து காலம் தாழ்த்தவே தொலைபேசியில் பேரனை வந்து கூட்டி செல்லாவிட்டால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என மிரட்டியுள்ளார். அதற்கு அவர் சில மாதங்களில் தன் மகனை தன்னுடனேயே அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். இந்நிலையில் சாந்தம்மா திங்கட்கிழமை பள்ளி முடிந்து ப்ரஜ்வாலை வீட்டிற்கு அழைத்து வரும் வழியில், தான் கொண்டு சென்ற கயிற்றால் சிறுவனின் கை, கால்களைக் கட்டி ஹேமாவதி ஆற்றில் வீசியுள்ளார். தண்ணீரில் மூழ்கிய ப்ரஜ்வால் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர் பேரன் இறந்ததை உறுதி செய்துகொண்ட சாந்தம்மா தானும் தண்ணீரில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற சிலர் அதைப் பார்த்து அவரைக் காப்பாற்றியுள்ளனர். இதையடுத்து சாந்தம்மா நேற்று காலை கிருஷ்ணராஜ பட்டி காவல் நிலையத்தில் தான் தனது பேரனைக் கொலை செய்துவிட்டதாகக் கூறி சரணடைந்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ந்துபோன காவலர்கள் உடனடியாக அவர் கொலை செய்ததாகக் கூறிய இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். தீவிர தேடலுக்குப் பின் ஹேமாவதி ஆற்றில் கை, கால்கள்  கட்டப்பட்ட நிலையில் சிறுவனை காவலர்கள் சடலமாக மீட்டுள்ளனர். 

Tags : #KARNATAKA #GRANDMOTHER #GRANDSON #BRUTAL #MURDER #RIVER #HANDS #LEGS #MOTHER #MARRIAGE #BOY