‘வைரலாகும் போதை ஆசாமியின்’.. ‘வடிவேலு காமெடி வீடியோ’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Sep 28, 2019 06:38 PM
திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு பாயில் படுக்க சிரமப்படும் நகைச்சுவைக் காட்சி போல போதையில் ஒருவர் தள்ளாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மது போதையில் தள்ளாடிக் கொண்டே வரும் ஒருவரை அவருடைய நண்பர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். ஆனால் போதை தலைக்கேறிய அவர் தள்ளாடி இரு சக்கர வாகனத்தில் ஏற முடியாமல் சுற்றி சுற்றிக் கீழே விழுகிறார்.
பின்னர் ஒரு வழியாக இரு சக்கர வாகனத்தில் ஏறி அமரும் அவர் தள்ளாடி நண்பரையும் சேர்த்து வாகனத்தோடு கீழே சாய்த்து விடுகிறார். திரைப்படத்தில் வரும் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சி போல அவர் போதையில் தள்ளாடி தள்ளாடி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
Tags : #DRUNKEN #MAN #VADIVELU #MOVIE #COMEDY #VIRAL #VIDEO #WATCH #MAT
