கர்ப்பமான மனைவிக்கு வேறலெவல் சர்ப்ரைஸ் கொடுத்த கணவன்..! வைரல் போட்டோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Oct 02, 2019 11:11 AM
கர்ப்பமான தனது மனைவிக்காக தொப்பைக் காட்டி கர்ப்பமானது போல் புகைப்படம் எடுத்துக்கொண்ட கணவரின் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜாரெட்-கெல்சி பிரேவர் என்ற தம்பதிக்கு குழந்தை பிறக்க உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக கெல்சி பிரேவருக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர் படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ளும் புகைப்படம் எடுக்க முடியாத சோகத்தில் கெல்சி பிரேவர் இருந்துள்ளார்.
இந்நிலையில் மனைவியின் சோகத்தை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என ஜாரெட் எண்ணியுள்ளார். அப்போது கே.எம். ஸ்மித்தர் என்ற புகைப்படக் கலைஞர் ஒரு யோசனை வழங்கியுள்ளார். அதன்படி ஜாரெட் தனது தொப்பையை கர்ப்பமானது போல் விதவிதமான புகைப்படங்கள் எடுத்துள்ளார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
