'தன்பாலின சேர்க்கைக்கு அழைத்தாரா?'..'ஆவேசமாக வந்து நின்ற 2வது மனைவி!'... 'ஆட்டோ மோகன்ராஜ்' வழக்கில் பரபரப்பு திருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 01, 2019 01:56 PM

சேலம் மாவட்டம் காகா பாளையத்தை அடுத்த செல்லியம்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் ராஜ், தனது நண்பனுடன் சேர்ந்துகொண்டு, ஆட்டோவில் ஏறி பயணிக்க வரும் குடும்பப் பெண்களை பேசி மயக்கி, தகாத உறவுக்கு அழைத்ததும், பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.

thats a fake video, Says wife of Selam auto driver

அதுமட்டுமல்லாமல், அவ்வாறு தன்னிடம் சிக்கிய பெண்களை வீடியோ எடுத்து, பின்னர் பணம் கேட்டு மிரட்டியும் துன்புறுத்தியும் சுகம் காணும் மனோபாவம் கொண்டவராகவும் மோகன் ராஜ் அறியப்பட்டார். இதனிடையே பள்ளிச் சிறுமிகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்ததாக கூறப்பட்டது.

திருமணம் ஆகி, மனைவி விட்டுச் சென்ற நிலையில், நண்பனின் மனைவியை 2வது தாரமாக திருமணம் செய்துகொண்ட மோகன்ராஜ், அந்த மனைவியை விட்டும் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்பட்டது. முன்னதாக, மோகன் ராஜின் வலையில் தானும் சிக்கியதாகவும், ஆனால் மோகன் ராஜ் தற்போது தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்திருந்த பெண் ஒருவர், மோகன் ராஜ் தனது கணவரை தன்பாலின சேர்க்கைக்கு அழைப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், மோகன் ராஜின் 2வது மனைவி பரிமளா,  ‘ஆட்டோ தொழிற்சங்கத்தில் இருக்கும் எனது கணவர் மீது தொழிற்பதவிப் போட்டி உள்ளவர்களால் பின்னப்பட்ட சதிதான் இந்த வீடியோ சமாச்சாரம்; அது மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ; அதனை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்;  எனது கணவர் மீதான பாலியல் குற்றங்களும், தன்பாலினச்சேர்க்கை குற்றச்சாட்டும் பொய்யானவை; அவர் அப்படிப்பட்டவரல்ல’ என்று சேலம் உதவி கலெக்டரிடம் மனு அளித்ததோடு உரிய விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : #CASE #AUTODRIVER #WIFE #SELAM