'செல்ஃபோனில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசிய நபருக்கு நிகழ்ந்த சோக சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 27, 2019 10:29 AM

செல்ஃபோனில் சார்ஜ் ஏற்றியவாறே ஃபோன் பேசிய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

speaking on phone while charging get electric shock died

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் தனது செல்ஃபோனில் சார்ஜ் இல்லாததால், சார்ஜ் போட்டுள்ளார். பின்னர் சார்ஜ் போட்டவாறே தனது செல்ஃபோனை பயன்படுத்தியுள்ளார். மேலும் சார்ஜர் ஏறிக்கொண்டு இருக்கும்போதே, யாரிடமோ செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாரதவிதமாக மின்கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மின்கசிவால் சார்ஜரில் இருந்த செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்த தேவேந்திரனையும் மின்சாரம் தாக்கியது.

அதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் சார்ஜரில் இருக்கும் செல்ஃபோனை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது  என்று பொறியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CELLPHONE #CHARGER #NAMAKKAL