'ECRக்கு மாணவனை நம்பி போன PROFESSOR '.. 'அதன் பிறகு நடந்த பயங்கரம்'.. பேராசிரியையின் துணிச்சலான முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 24, 2019 10:21 AM

பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வந்த உதவிப்பேராசியையை தனியே அழைத்துச் சென்று தகாத வீடியோவை எடுத்த மாணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

student shoots video of lady professor and blackmailed

ஆந்திராவை பூர்வீகமாக் கொண்ட உதவிப் பேராசிரியை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பல்கலைக் கழகத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க விவேஷ் என்கிற மாணவர் பயின்று வந்துள்ளார். இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதால், மாணவருடன் அந்த ஆசிரியை நட்பு பாராட்டி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் படிப்பு முடிந்து ஆந்திராவுக்குச் செல்லவிருப்பதால் விவேஷ், அந்த ஆசிரியைக்கு ட்ரீட் வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆசிரியையும் இதற்கு சம்மதித்துள்ளார்.

இதனையடுத்து சோழிங்கநல்லூர் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியையை அழைத்துக் கொண்டு, விவேஷ் தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலை வழியே சென்றுள்ளார். அங்கு ஆளரவம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தகாத வீடியோக்களையும் புகைப்படங்களையும் எடுத்ததோடு தன்னுடன் இணங்குமாறு மிரட்டியுள்ளார். ஆனால் ஆசிரியை தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியதை அடுத்து, அவரை மீண்டும் விடுதியில் கொண்டுவந்து விட்டதோடு மீண்டும் மீண்டும் போன் செய்து தொல்லை செய்து வந்துள்ளார் விவேஷ். முதலில் தயங்கிய அந்த ஆசிரியை பின்னர், தைரியமாக சென்று செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

மறுமுறை விவேஷ் அழைத்தால் தங்களிடம் தகவல் கூறும்படி போலீஸ் கூறியுள்ளனர். இதனை அடுத்து கோயம்பேடுக்கு விவேஷ் வரசொன்னதன் பேரில், போலீஸாருக்கு தகவல் கொடுத்துவிட்டு ஆசிரியை அங்கு சென்று விவேஷை சந்தித்துள்ளார். அப்போது அங்கு தயாராக இருந்த போலீஸார் விவேஷை கையோடு பிடித்து வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : #COLLEGESTUDENT #PROFESSOR #UNIVERSITY #TORTURE #ABUSE