"இளைஞரால் 5 வயது சிறுமிக்கு நடந்த சோகம்..." "ஆத்திரத்தில் உறவினர்கள் செய்த காரியம்?"... "என்ன நடந்தது?"...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manishankar | Jan 13, 2020 12:22 PM
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், நத்தம் கூட்ரோடு அருகே, சந்தோஷ் என்ற இளைஞர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை, சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இச்சம்பவத்தை, பாதிக்கப்பட்ட சிறுமி அவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதையடுத்து, சிறுமியை பெற்றோர் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.
இது குறித்து, சம்பந்தப்பட்ட இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய இளைஞர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சிறுமியின் உறவினர்கள் ஆத்திரத்தில் இளைஞரை அடித்துக் கொன்றதாகவும் செய்திகள் கசிகிறது. இதையடுத்து, இளைஞரின் மரணம் பற்றி போலீஸ் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகிறது.
