"யாரோட குழந்தை இது?"... "குழந்தை கடத்தற கும்பலா?"... "கலெக்டரிடம் சிக்கிய பெண்!"...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 11, 2020 02:19 PM

குழந்தைகளை வைத்து பிச்சையெடுக்கும் நபர்களைக் கண்டறிய வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

District collector orders to identify beggers in Vellore

வேலூர் மாவட்டத்தில் வடமாநிலப் பெண்கள் பலர், கைக்குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுத்து வருகிறார்கள்.

பொது மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் குழந்தைகளை வைத்துக் கையேந்துவதால், இவர்கள் யார்? இந்த குழங்தைகள் அவர்களுடையது தானா? அல்லது குழந்தைகளைக் கடத்தும் கும்பலா? போன்ற கேள்விகள் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

மேலும், வேலூர் அருகே மேல்மொணவூர் பகுதியில் சாலையோரமாக ஆந்திராவைச் சேர்ந்தவர்களும் வடமாநிலத்தவர்களும் வசித்துவருவதாக கலெக்டருக்கு தகவல் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் குழந்தைகளுடன் பிச்சையெடுத்து சுற்றித் திரியும் பெண்களின் விவரங்களை உடனடியாக கணக்கெடுக்குமாறு, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : #VELLORE #COLLECTOR #WOMEN #BEGGING