“நள்ளிரவில் வீட்டுக்கு வந்த கொள்ளையர்கள்”.. “அலறிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப கதி”!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jan 12, 2020 07:17 PM
உத்தரப்பிரதேசத்தில் கொள்ளையர்கள், இளம் பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்துவிட்டுச் சென்ற சம்பவம் அதிரவைத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் பகுதியில் பேஹ்ட்டா ஹாஸிபூர் கிராமத்தின் ஒரு வீட்டிற்கு நள்ளிரவு 1 மணி அளவில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் சென்றுள்ளனர். அங்கு 35 வயது இளம் பெண் ஒருவர், தனது கணவர், மகன்,மகள், தம்பி உள்ளிட்டோருடன் முதல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். கொள்ளையர்கள் வந்த நேரம், அந்த பெண் எழுந்துள்ளார். அவர் கொள்ளையர்களின் இருப்பை உணர்ந்துள்ளார். அப்போது 4 பேரில் ஒரு கொள்ளையனைக் கண்டதும் இளம் பெண் கத்தியுள்ளார். உடனே கொள்ளையர்கள் ஓங்கி அடித்துள்ளனர்.
அதன் பின் அந்த வீட்டில் இருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துவிட்டு கொள்ளையர்கள் சென்றுவிட, சத்தம் கேட்டு அங்கு வந்த இளம் பெண்ணின் கணவர், அப்பெண்ணை மருத்துவமனை அழைத்துச் செல்ல, ஆனால் அப்பெண் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போலீஸார், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
