'குடிச்சுட்டு கார் ஓட்டுனது யார் தெரியுமா?'... 'அதிர்ந்த பொதுமக்கள்!'... 'பெண் படுகாயம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 15, 2020 12:18 PM

குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

Police Inspector brutally attacked after hitting a woman

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விளைகிராமத்தைச் சேர்ந்தவர், ராதா. அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, சொகுசுகார் ஒன்று அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ராதா படுகாயமடைந்தார். அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்த பொதுமக்கள், குடிபோதையில் காரை ஓட்டி வந்த நபரை சரமாரியாக தாக்கினர்.

சம்பவ இடத்துக்கு வந்த ஆரணி காவல் நிலைய போலீசார், கார் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேதுபதி என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம், அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #WOMAN #POLICE