‘3 பெண் குழந்தைகள்’.. ‘ஆனா ஆண் வாரிசு இல்லை’.. பல நாள் வருத்தம்.. விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 09, 2020 12:30 PM

வாரிசாக ஆண் குழந்தை இல்லாத மனவருத்ததில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman commits suicide over not having son in Andhra Pradesh

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சுங்கேசுலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி சரம்மா. கடந்த 2000-ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் வாரிசாக ஒரு ஆண் குழந்தை இல்லையே என்ற வருத்தத்தில் சரம்மா நீண்ட காலமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சரம்மாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆண் குழந்தை இல்லாத வருத்தத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #CRIME #WOMAN #ANDHRAPRADESH #KURNOOL #SON