'கொஞ்ச நாள்ல எனக்கு கல்யாணம் டா'... 'TRUE CALLER' மூலம் நம்பரை தூக்கிய இளைஞர்'... பகீர் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 10, 2020 12:08 PM

True caller மூலம் மொபைல் எண்ணை எடுத்து, பெண்களுக்கு ஆபாச படங்களை இளைஞர் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai : Man arrested for disturbing college girl Through TrueCaller

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு,கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு புதிய செல்போன் எண்ணில் இருந்து காதல் குறுஞ்சய்திகள் வந்துள்ளன. தெரியாத எண்ணில் இருந்து வந்த குறுஞ்சய்தி என்பதால் அதனை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு காதல் குறித்த குறுஞ்செய்திகள் அந்த எண்ணில் இருந்து வந்துள்ளன.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த மாணவி, அந்த செல்போன் எண்ணை தொடர்புக்கொண்டு கொஞ்ச நாளில் எனக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், இது போன்ற குறுஞ்சய்திகளை அனுப்ப வேண்டாம் என கடுமையாக பேசியுள்ளார். இதையடுத்து குறுஞ்சய்தி வருவது நின்ற நிலையில், ஆபாச படங்கள் அவரது எண்ணிற்கு வர தொடங்கியுள்ளன. இதை இப்படியே விட்டால் விபரீதத்தில் முடியும் என்பதை உணர்ந்த அந்த மாணவி, நடந்த சம்பவங்கள் குறித்து திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை தொடர்ந்து அந்த எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த எண் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் முல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து வினோத் குறித்த தகவல்களை சேகரித்த போலீசார், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மும்மூர்த்தி நகரில் அவன் இருப்பதை கண்டறிந்து சம்பவ இடத்திற்கு சென்று கைது செய்தனர்.

இதையடுத்து வினோத்திடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. True Caller'யில் குத்துமதிப்பாக 10 எண்களை பதிவிடுவது வினோத்தின் வழக்கம். அப்படி பதிவிடும்போது ஏதேனும் பெண்கள் பெயர் வந்தால் உடனடியாக அந்த எண்ணை தனது மொபைலில் சேமித்து வைத்து கொண்டு, அவர்களிடம் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி பேசும் பெண்களை காதல் வலையில் விழவைப்பது தான் வினோத்தின் முழுநேர வேலையாக இருந்துள்ளது.

மிகவும் நெருக்கமாகும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவது, ஆபாச படங்களை அனுப்புவது என தனது சித்து வேலைகளை வினோத் காட்டியுள்ளார். அதில் மயங்கும் பெண்களை நேரில் வரவைத்து தனது பாலியல் இச்சைக்கு இரையாக்கிய அதிரவைக்கும் தகவலும் வெளிவந்துள்ளது. வினோத் மூலம் மார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

முன்பின் தெரியாத நபரிடம் குறுஞ்செய்திகளோ, புகைப்படங்களோ, வீடியோக்களோ வந்தால் தயங்காமல் அந்த எண்ணை பெண்கள் ப்ளாக் செய்ய வேண்டுமென போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.

Tags : #SEXUALABUSE #COLLEGESTUDENT #TRUE CALLER #MESSAGE #CHENNAI