அரையாண்டு 'விடுமுறை' மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு... புதிய தேதி 'குறித்து' விரைவில் அறிவிப்பு?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 30, 2019 03:36 PM

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மறுநாளும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil Nadu Schools Reopening date maybe extend, Report

எப்போதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படும். ஆனால் அன்றைய தினம் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இருப்பதால், ஜனவரி 3-ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை மறுநாளும் தொடர வாய்ப்புகள் இருப்பதால், ஜனவரி 3-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட வேண்டி உள்ளதால் 3-ம் தேதி பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. 4 மற்றும் 5-ம் தேதிகள் சனி, ஞாயிறாக இருப்பதால் பள்ளிகள் 6-ம் தேதி திறக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தற்போது உயர் அதிகாரிகள் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.