‘கொலைக்குமுன் கறி விருந்து’!.. ‘காட்டுக்குள் சடலமாக கிடந்த கர்ப்பிணி ’.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 26, 2019 03:32 PM

ஆம்பூர் அருகே செல்போன் பேச சென்ற கர்ப்பிணி பெண் மர்மமாக இறந்து கிடந்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Ambur pregnant woman murder case 2 person arrested

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சுட்டகுண்டா பகுதியை சேர்ந்தவர் ரேவதி (22). இவருக்கும் மாச்சம்பட்டு பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனை அடுத்து ரேவதி கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் மகேஸ்வரன் பெங்களூரில் வேலை பார்த்து வருவதால், சுட்டகுண்டாவில் உள்ள தனது பாட்டி வீட்டில் ரேவதி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரேவதி செல்போன் சிக்னல் கிடைக்காததால் வீட்டுக்கு வெளியே போன் பேச சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் ரேவதி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது உறனவினர், ரேவதியை தேடி சென்றுள்ளனர். அப்போது மலைப்பகுதியில் ரேவதி இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் ரேவதியின் உறவினர்களான சித்ரா மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இருவரும் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவர்களிடம் போலீசார் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது நகைக்காக ரேவதியை அவர்கள் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சித்ரா மற்றும் செல்வராஜை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 10 சவரன் நகையை கைப்பற்றியுள்ளனர். மேலும் கொலை செய்தவற்கு முன்பு ரேவதிக்கு, சித்ரா கறி விருந்து வைத்ததும், ரேவதி செல்போன் பேசும் முன் சித்ராவிடம் கூறிவிட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : #CRIME #MURDER #AMBUR #PREGNANT #WOMAN