‘என்ன தூக்குல போடுங்க’!.. ‘அமைச்சரிடம் மனு கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மனைவி’.. அதிரவைத்த காரணம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Dec 25, 2019 03:35 PM
காவல்துறை அதிகாரியின் மனைவி தனது கணவரை கொலை செய்துவிட்டதாக கூறி, தம்மை தூக்கிலிட வேண்டும் என அமைச்சரிடம் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது மறைந்த உதவி காவல் ஆய்வாளர் ரோத்தஸ் சிங் என்பரின் மனைவி சுனில் குமாரி அமைச்சரிடம் ஒரு மனு கொடுத்துள்ளார். அதை படித்த அமைச்சர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
அதில், மதுவுக்கு அடிமையான தனது கணவர், தினமும் வீட்டில் தகராறு செய்ததாகவும், அதனால் கடந்த 2017-ம் ஆண்டு குடித்துவிட்டு வந்த கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பின்னர், சாப்பிடும்போது உணவு சிக்கியதால் மூச்சி திணறல் ஏற்பட்டதாக அவரை மருத்துமனையில் அனுமதித்தேன். தற்போது குற்ற உணர்ச்சியில் அவதிப்படுவதால் தன்னை தூக்கிலிட வேண்டும் என கோரியுள்ளார்.
இதனை அடுத்து சுனில் குமாரியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த போலீசார், ரோத்தஸ் சிங்கின் உடற்கூராய்வில் சந்தேகத்திற்கிடமாக ஏதும் கண்டறியப்படவில்லை. தற்போது சுனில் குமாரி கொடுத்த மனுவின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.