'இது தப்பான உறவுன்னு சொன்னேன்'...'கேக்கல'...'பிளான் போட்டு தூக்கிய தாய்'...பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 26, 2019 03:11 PM

18 வயது மகளோடு தகாத உறவில் இருந்த நபரை, பெண்ணின் தாய் திட்டம் போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman, 3 others abduct, kill man over affair with daughter in Mumbai

மும்பை முல்லுண்டு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் கடந்த 20ம் தேதி வேலை நிமித்தமாக வெளியே செல்வதாக, தனது மனைவியிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாபுவின் குடும்பத்தினர் முல்லுண்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.

அவர் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், தானே மாவட்டம் சகாப்பூா் பகுதியில் பாபு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தன்னுடைய கணவர் தான் என, பாபுவின் உடலை அவரது மனைவி அடையாளம் காட்டினார். இந்த மர்ம கொலை சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகள் யார் என்பதை கண்டறிவதில் சற்று சிரமம் நிலவியது.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், முறை தவறிய உறவால் பாபு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பாபுவிற்கு 18 வயது இளம்பெண் ஒருவருடன் முறை தவறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த பெண்ணின் தாய் கீதா, உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. எனது மகளுக்கு 18 வயது தான் ஆகிறது. எனவே அவளை தொந்தரவு செய்யாதே என பலமுறை கூறியுள்ளார்.

ஆனால் கீதா எவ்வளவோ கூறியும் பாபு தனது உறவை விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கீதா சம்பவத்தன்று 4 பேருடன் சேர்ந்து குடிபோதையில் இருந்த பாபுவை ஆட்டோவில் கடத்தி உள்ளார். பின்னர் ஆட்டோவில் வைத்து பாபுவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உடலை சகாப்பூர் பகுதியில் வீசி விட்டு தப்பி விட்டனர். இதையடுத்து கீதாவை கைது செய்த காவல்துறையினர், கொலையில் தொடர்புடைய மேலும்  4 பேரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags : #MURDER #MUMBAI #KILLED #DAUGHTER #MUMBAI POLICE #ABDUCT