உடைந்துபோன குடிநீர் குழாய்... போதாத குறையாக பெய்த மழை!.. 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த கோரம்!.. கதறும் மக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாணியம்பாடியில் குடிநீர் குழாயை சரிசெய்வதற்காக தோண்டப்பட்ட குழியில் 7 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தைப் பகுதியில் நகராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அந்த தொட்டி அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக்குழாயை சரி செய்யும் பணிக்காக குழி தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வாணியம்பாடி பகுதியில் மழை பெய்ததால் குழி முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் குழி குறித்து ஏதும் தெரியாமல் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் குழிக்குள் விழுந்துள்ளான். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
