'இந்த மருந்தை சாப்பிட்டால் உடனடியாக...' 'பாட்டி கூறிய 11 வகை மூலிகைககள் கொண்டு...' கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த தமிழக மாணவர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரசை குணப்படுத்த பாட்டி கூறிய முறைப்படி 11 மூலிகைகளை கொண்டு மருந்து கண்டுபிடித்த திருப்பூரை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் அதனை கலெக்டரிடம் ஒப்படைத்தார்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பள்ளி மாணவர் ஒருவர் சீனாவில் பரவிவரும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடித்து விட்டதாகவும், அதனை கலெக்டரிடம் அளிக்க உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து மருந்து மற்றும் விண்ணப்பதை கலெக்டரிடம் அளித்தார். விசாரணையில் அந்த மாணவர் திருப்பூர் கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர் இசக்கிராஜ் (வயது14) என்பது தெரியவந்தது.
அந்த விண்ணப்ப மனுவில் "சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரசுக்கு எனது பாட்டி கூறிய முறைப்படி 11 மூலிகைகளை கொண்டு மருந்து தயாரித்துள்ளேன். இந்த வைரஸ் தும்மல் மூலம் பரவுகிறது. இந்த நாட்டு மருந்தை சாப்பிட்டால் நோய் தாக்கியவரின் மூச்சுக்குழாய், நுரையீரல் மற்றும் உணவு குழாய் ஆகியவைகள் படிப்படியாக சீராகிவிடும்.
நான் கண்டுபிடித்த மருந்தை கலெக்டரிடம் அளிக்க முயன்றேன். ஆனால் பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்று வரவேண்டும் என்று கூறினர். அதன்படி தலைமை ஆசிரியர் அனுமதியுடன் கலெக்டரிடம் நான் கண்டு பிடித்த மருந்தை கொடுத்துள்ளேன். இதனை கோவை அல்லது வேறு சோதனை கூடத்தில் பரிசோதனை செய்யலாம்." இவ்வாறு அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
