'தொப்புள் வழியா மலம் போகுது...' 'ஒரு குழந்தை பிறந்து கொஞ்சம் நாள்லையே இறந்துடுச்சு...' உதவிக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 06, 2020 07:47 AM

பிறந்ததிலிருந்தே தொப்புள் வழியே மலம் வெளியேறும் குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவியுள்ளார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Collector for treatment the baby passes through the navel

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வசித்து வருகிறார் கூலித் தொழிலாளி மாரி (28) மற்றும் அவரது மனைவி திவ்யா (22). இத்தம்பதிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

உடல்நிலை கோளாறுகளுடன் பிறந்த இரு குழந்தைகளில் ஒன்று சில நாட்களிலேயே இறந்துள்ளது. மற்றொரு குழந்தைக்கும் தொப்புள் வழியே மலம் வெளியேறும் பிரச்சனை இருந்துள்ளது.

மேலும் அடுத்தகட்ட சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் குழந்தையைப் பெற்றோர் அனுமதித்தனர். தங்களின் வசதிக்கு மீறி பல இடங்களில் கடன் வங்கி சுமார் ரூ.1 லட்சம் வரை செலவு செய்தும் குணமாகவில்லை. அறுவைசிகிச்சைக்காக   மேலும் 2 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பணம் இல்லாததால் தன் 4 மாதக் குழந்தையை வீட்டிற்கே அழைத்து வந்துள்ளனர் மாரி மற்றும் திவ்யா தம்பதிகள். பெற்றோர்களின் இயலாமை  குறித்தும், குழந்தையின் உடல்கோளாறு குறித்த செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த குழந்தை பற்றி அறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்கள், குழந்தையை மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தார். மேலும் முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுத்தார். அக்குழந்தைக்கு மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் உள்ளிட்டோர் உதவி செய்தனர்.

இந்த குழந்தை மட்டும் இல்லாமல், பிறந்து 10 நாட்கள் ஆன குழந்தைக்கு, பிறக்கும் போதே முதுகில் கட்டி இருக்கிறது என செய்திகள் வெளியாகியது. அந்தக் குழந்தைக்கும் முதுகில் இருந்த கட்டியை அகற்ற ஆட்சியர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுத்துள்ளார்என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரச காலங்களில் உதவி தேவைப்படுபவர்களுக்கு தன்னுடைய கரங்களை நீட்டி உதவி செய்து வருகிறார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்.

Tags : #NAVEL #KID