'மனிதர்களை கொன்ற கொரோனாவால்... மனிதத்தை கொல்ல முடியவில்லை!'... 7 வயது சிறுவன் முதல் 82 வயது மூதாட்டி வரை... கொரோனா தடுப்பு பணிகளுக்கு... அள்ளி வழங்கும் நெஞ்சங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 02, 2020 10:42 AM

 கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக மத்திய மாநில அரசுகள் குடிமக்களிடம் நிதியுதவி கோரியுள்ளன. இதன் விளைவாக, தனிமனிதர் தொடங்கி பெரு நிறுவனங்கள் வரை பலர் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர்.

82 yr old granny and 7 yr old kid donates to covid19 relief

அந்த வகையில், மத்தியப் பிரதேச அரசும் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நிதியுதவி அளிக்கும்படி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த செய்தி, சல்பா உஸ்கர் என்ற 82 வயது மூதாட்டிக்கு தெரியவந்தது.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர், கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்கு உதவ, தன்னுடைய ஓய்வூதியத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். இத்தகவலை அரசு அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர்.

இதுகுறித்து மூதாட்டி  சல்பா உஸ்கர் கூறும்போது, "கொரோனா ஒழிப்புக்கு உதவ முடிவெடுத்தேன். தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள முழு அடைப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன். அரசு வெளியிடும் உத்தரவுகளை மதித்து பின்பற்ற கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

இவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோவை, ம.பி. மக்கள்தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. அந்த வீடியோவை முதல்வர் சிவ்ராஜ் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில்பகிர்ந்துள்ளார்.

அதேபோல மிசோரம் மாநிலத்தின் கோலாசிப் நகரைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ரோமல் லால்முவான் சங்கா. இந்த சிறுவன் தனது உண்டியலை உடைத்து அதில் இருந்து ரூ.333 சேமிப்பு பணத்தை உள்ளூர் கிராம அலுவலர்களிடம் வழங்கி உள்ளான்.

சிறுவனுடைய மனிதாபி மானத்தை முதல்வர் ஜோரம் தங்கா உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Tags : #CORONA #CORONAVIRUS #GRANNY #PMCARES #KID #SAVINGS