'மனைவிய காணோம் சார்.. எங்க போனானே தெரியல'.. சகோதரருடன் சேர்ந்து கணவரின் நடுங்கவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 19, 2019 11:43 AM

கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கல்லேஷ் மற்றும் அவரது மனைவி ஷில்பா (21). இந்த இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில், இருவரும் பெங்களூரின் கொத்தனூர் அருகே உள்ள துர்கா பரமேஸ்வரி லே-அவுட்டில் வசித்து வந்தனர்.

husband kills wife and buries with the help of his brother

கல்லேஷ் ஒரு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்திலும், ஷில்பா ஒரு தனியார் தொழிற்சாலையிலும் வேலை செய்து வந்தனர். ஒரு நாள் ஷில்பா திடீரென காணாமல் போய்விட்டதாக கல்லேஷ் போலீஸில் புகார் அளித்தார். ஆனால் அதே சமயம், ஷில்பாவின் பெற்றோர், ஷில்பாவின் கணவர் கல்லேஷ் மீது சந்தேகப்பட்டனர்.

இதனையடுத்து கல்லேஷை போலீஸார் ரகசியமாகக் கண்காணிக்கவும், பின்னர் காவல் துறையின் கஸ்டடியில் விசாரிக்கவும் செய்தனர். அப்போதுதான், ஷில்பா காணாமல் போகவில்லை என்றும், தனக்கு பிடிக்காத வேலைக்கு சென்ற தன் மனைவி, சம்பள பணத்தையும் தன்னிடத்தில் தராமல் வைத்திருந்ததால் ஆத்திரத்தில் தலையணையால் அமுக்கிக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன் பின், கொத்தனூரில் உள்ள ஒரு இடத்தில் தன் அண்ணன் கிருஷ்ணப்பாவின் உதவியோடு மோட்டார் பைக்கில் சென்று ஷில்பாவின் பிரேதத்தை புதைத்ததாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் அண்ணன், தம்பி இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags : #BENGALURU #BANGALORE #HUSBANDANDWIFE