'டிக்டாக் வீடியோவுல கள்ளக்காதலனோட கொஞ்சினா.. 'அதான் ஆத்திரத்தில் இப்படி செஞ்சேன்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 19, 2019 03:11 PM

திண்டுக்கல்லின் கொடைரோடு அருகே கடந்த ஜூலை 14-ஆம் தேதி, சாக்குமூட்டை ஒன்று தீயில் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் அது பார்ப்பதற்கு வழக்கத்துக்கு மாறான பயத்தைக் கொடுத்ததால், உடனே பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் போலீஸார் வந்து அந்த தீயை அணைத்து மூட்டையைப் பிரித்தால், உள்ளே இருந்தது எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு பெண்ணின் பிணம்.

wife did tiktok video with her boyfriend, killed by husband

இதனிடையே, கரூர் மாவட்டத்தில் உள்ள, தான் தோன்றிமலையில் உள்ள சிவசங்கரன் என்பவர், தனது மனைவி சூரியகுமாரியைக் காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன் படி விசாரணை மேற்கொண்ட போலீஸார் பின்னர் சிவசங்கரன் மீது சந்தேகப்பட்டு அவருடைய செல்போனை கேட்டபோது, அவர் செல்போன் தொலைந்ததாகக் கூறியுள்ளார். அதனை ட்ரேஸ் செய்தபோதுதான், அந்த செல்போன் கடைசியாக கொடைரோடு பகுதியில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

அங்கு சென்று போலீஸார் விசாரித்தபோது,சாக்கு மூட்டைக்குள் எரிந்துபோன பெண் பிணம் பற்றிய விபரங்கள் தெரியவந்தது. அதன் பின்னர் சிவசங்கரனை பிடித்து விசாரித்தபோது,  தன் மனைவிக்கும் வேறு ஒரு வாலிபருக்கும் டிக் டாக் மூலம் கள்ளக்காதல் மலர்ந்ததாகவும், இருவரும் இணைந்து கொஞ்சி பேசி வீடியோக்களை வெளியிட்டதால் ஆத்திரமடைந்ததாலும், மனைவியைக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி, காரில் கொண்டுவந்து கொடைரோடு அருகே வீசியதாகவும், தனது செல்போனையும் அங்கு வீசிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் சாக்குமூட்டையில் இருந்த பிணவாடை தாங்கவியலாமல், யாரோ தீவைத்திருக்க வேண்டும் என்கிற யூகத்துக்கு வந்த போலீஸ் சிவசங்கரனை கைது செய்துள்ளனர்.

Tags : #TAMILNADU #HUSBANDANDWIFE