'இதுக்குத்தான் அக்காவ அழச்சுட்டு போனீங்களா மாமா?'.. கதறும் சகோதரர்.. போலீஸ் கணவரால் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 19, 2019 05:35 PM

காவலர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புழல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Police kills wife and hangs himself left 7 yrs old son

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் காவலராக பணிபுரிந்து வந்த நரேஷ் என்பவருக்கும் அவருடைய மனைவி ஜெயஸ்ரீக்கும் வருண் என்கிற 7 வயது மகன் இருக்கும் நிலையில், அனைவரும் செம்பியன் காவலர் குடியிருப்பில் வசித்துவந்தனர். இந்த நிலையில் ஜெயஸ்ரீ தன் கணவருடன் உண்டான தகராறு காரணமாக, பெரம்பூரில் இருக்கும் தன் பிறந்த வீட்டுக்கு குழந்தையுடன் சென்றார்.

அங்கு ஜெயஸ்ரீயின் சகோதரர் சரவணன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் ஜெயஸ்ரீயை சமாதனப்படுத்தி, அங்கு வந்த நரேஷுடன் அனுப்பி வைத்தனர். ஆனால் அதன் பின் வருண் பள்ளி முடிந்து, புழலில் உள்ள தன் வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்ததால் வீட்டிற்கு வெளியில் விளையாண்டுகொண்டு இருந்துள்ளான்.

அப்போது அக்காவுக்கும் மாமாவுக்கும் போன் செய்துபார்த்த சரவணன், யாரும் போனை எடுக்காததால், புழலுக்கு வர, அங்கு வீட்டுமுன் விளையாடிக்கொண்டிருந்த வருணிடம் விசாரித்துள்ளான். அதன் பின் பூட்டியிருந்த வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அக்கா கொலை செய்யப்பட்டும், மாமா தூக்கில் தொங்கியபடியும் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன் பின் போலீஸாரிடம் தகல்வ அளிக்கப்பட்டது. அவர்கள் முதலில் நரேஷ் மனைவியைக் கொன்றுவிட்டு, பின் மனம் கேட்காமல் தானும் தற்கொலை செய்துகொண்டதாகவும் கருத்து வேறுபாடுதான் இதற்குக் காரணம் என்றும் கூறியுள்ளனர்.  'அக்காவ கொல்லத்தான், மாமா வந்து அழைச்சுட்டு போனாரா?' என்று சரவணன் சம்பவ இடத்திலேயே கதறியுள்ளார்.

Tags : #SUICIDEATTEMPT #CHENNAI #PUZHAL #POLICE #HUSBANDANDWIFE