'அடிச்சது அப்பா.. கெரோசின் ஊத்துனது அத்தை.. அப்றம் எரிச்சது'.. 5 வயது பிஞ்சு மகளின் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தின் உச்சம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 20, 2019 01:04 PM

உத்தரப் பிரதேச மாநிலம், ஸரஸ்வதி மாவட்டத்தில் உள்ளது காத்ரா கிராமம். இங்குள்ள நது வீட்டில் தனது மனைவி சாயிஷா மற்றும் 5வயது மகள் பாத்திமாவை, தன் குடும்பத்தாரிடம் விட்டுவிட்டு, மும்பையில் பணிபுரிந்துவந்த நபீஸ் எனும் 26 வயது இளைஞர், கடந்த சில நாட்களுக்கு முன் போனிலேயே சாயிஷாவுக்கு முத்தலாக் கொடுத்தார்.

talaq- family sets mother on fire infront of 5 yrs old girl

இதனையடுத்து அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் சாயிஷா, தனது கணவர் நபீஸ் மீது புகார் அளித்தார். ஆனால் போலீஸார் இந்த புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதற்கு மாறாக, நபீஸிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும், அவர் முமபையில் இருந்து வீடு திரும்பினால், அழைத்துவரச் சொல்லியும் போலீஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், நபீஸ் ஊருக்கு வந்தபோது தன் மனைவி சாயிஷாவிடம் முதல் வேலையாக, முத்தலாக் சொன்ன பிறகு, எதற்கு என் வீட்டில் தங்கி இருக்கிறாய்? வீட்டுக்கு போ என்று கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், வீட்டில் இருந்த நபீஸின் தந்தை அசீஸூல்லா, அம்மா ஹசீனா, நபீஸின் சகோதரிகளான நாதிரா, குடியா ஆகியோர் கூடியுள்ளனர்.

அப்போது நபீஸ் சாயிஷாவின் தலைமுடியைப் பிடித்து அடிக்க, சாயிஷாவின் மீது நாதிரா கெரோசின் ஊற்ற, அசீஸூல்லாவும் , ஹசீனாவும் தீக்குச்சியை உரசி பற்றவைத்து உயிரோடு எரித்தனர். முழுதாக எரிந்து முடிந்த பின்பு அவர்கள் நகர்ந்திருக்கின்றனர். ஆனால் சாயிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

போலீஸார் வந்து விசாரிக்கும்போது, தன் கண் முன்னே நடந்த கோரமான சம்பவத்தை நபீஸ்-சாயிஷாவின் 5 வயது மகள் பாத்திமா அப்படியே விவரித்துள்ளார். இதனையடுத்து அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை வழங்கப்பட வேண்டும், என்பதால், நீதிமன்றத்தை நாடவுள்ளதாக சாயிஷாவின் சகோதரர் ரபீக் கூறியுள்ளார்.

படம்: சித்தரிப்புப் படம்

Tags : #BIZARRE #HUSBANDANDWIFE #TRIPLETALAQ #POLICE #MURDER #CRIME