'வேண்டவே வேண்டாம்!'.. 'பிறந்து 15 நாளே ஆன பெண்குழந்தை'.. இரக்கமின்றி தந்தை செய்த 'நடுங்க வைக்கும் காரியம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 05, 2019 12:19 PM

பெண்ணாக பிறந்ததால் திருக்கோவிலூர் அருகே, பிறந்து 15 நாளே ஆன பச்சிளம் பெண் சிசுவைக் கொன்று ஆற்றில் புதைத்ததற்காக, குழந்தையிம் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

TN father buried his newborn girl baby aged 15 days

திருக்கோவிலூர் அருகே உள்ளது சுந்தரேசபுரம். இங்கு வசித்த வந்த வரதராஜன் மற்றும் அவரது மனைவி சவுந்தர்யா தம்பதிக்கு திருமணம் ஆகி 15 மாதங்கள் கழிந்த நிலையில், 15 நாட்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் குழந்தை காணாமல் போனது.

குழந்தையின் தாய், தனது உறவினர்களுடன் குழந்தையைத் தேடத் தொடங்கினார்.  அப்போது தென்பெண்ணை ஆற்றில் இருந்த பள்ளம் ஒன்றில் மண்ணை தோண்டிய போது, துணியால் சுற்றப்பட்ட நிலையில் பெண் குழந்தையின் சடலம் கிடைத்தது. இதனையடுத்து நடந்த விசாரணையில், பெண் குழந்தை என்பதால் குழந்தையை, குழந்தையின் தந்தை வரதராஜனே இவ்வாறான கொடுமையான முறையில் கொன்று புதைத்தது தெரியவந்தது.

பச்சிளம் குழந்தை என்றும் பாராமல், பிற்போக்குத் தனமாகவும், ஈவிரக்கம் இன்றியும் பெண் குழந்தையைக் கொன்று ஆற்றில் புதைத்த வரதராஜனை போலீஸார் கைது செய்தனர்.

Tags : #NEWBORN #FATHER #VILUPPURAM