'நான் மனநலம் பாதிக்கப்பட்டவளா? அவங்கதான் 10 வருஷமா போதை ஊசி போட்டு சித்ரவதை செஞ்சாங்க!'.. ’வீடியோ’ வெளியிட்ட முன்னாள் எம்.எல்.ஏவின் மகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 20, 2019 08:38 PM

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவான  சுரேந்தர்நாத் கடந்த 16-ஆம் தேதி தனது 28 வயது மகளான பாரதி சிங்கை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் காணவில்லை, ஆதலால் அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் புகார் அளித்தார்.

Former MLA daughter alleged her father by releasing video

இன்னொரு புறம் தன்னுடைய ஆட்களுடன் தீவிரமாக மகளைத் தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் இதனிடையே அவரது மகளான பாரதி சிங், தன்னை தன் தந்தை வேறொரு எம்.எல்.ஏவின் மகனை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துவதாகவும், ஆனால் தனக்கு அந்த திருமணத்தில் உடன்பாடு இல்லாமல் விருப்பப் படி வாழ விரும்புவதால் தன்னை ஒத்துக்கச் சொல்லி ஊசி மூலம் போதை மருந்து ஏற்றி துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ உள்ளூர் சேனல்களில் ஒளிபரப்பானது.

மேலும், அந்த வீடியோவில் பேசிய பாரதி சிங், தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தனது குடும்பத்தார் வாங்கிய மருத்துவச் சான்றிதழ் போலியானது என்றும் இதுவரை 10 முதல் 20 முறை வரை வீட்டை விட்டு வெளியேறி தன்னை கடந்த 10 வருடங்களாக சித்ரவதை செய்து வருவதாகவும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் சுரேந்தர்நாத் சிங், தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச் சாட்டுகளை மறுத்துள்ளதோடு, தன் மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்தான் என்றும், தன் மகளை ஒரு தந்தை ஒரு நல்ல இடத்தில் சம்மந்தம் பண்ணி தர வேண்டும் என்று நினைப்பதெல்லாம் கூட ஒரு குற்றமா? என கேள்வி கேட்டுள்ளார்.

Tags : #MADHYAPRADESH #DAUGHTER #FATHER #BIZARRE