‘கடலில் சிக்கி உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்’.. ‘கண்ணீர் மல்க சல்யூட் அடித்து வீரவணக்கம் செய்த மகள்’.. நெகிழ்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 01, 2019 03:36 PM

உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரரின் உடலுக்கு அவரது மகள் கண்ணீர் மல்க வீர வணக்கம் செலுத்திய சம்பவம் அனைவரையும் உருக வைத்துள்ளது.

CRPF jawan’s daughter pays tribute to her father in Chennai

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். சிஆர்பிஎஃப் படைப் பிரிவின் தலைமை காவல் அதிகாரியான இவர் அந்தமானில் பணியாற்றி பந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சக அதிகாரிகளுடன் கடலுக்குக் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட ராட்ச அலையில் சிக்கி செந்தில் குமார் கடலுக்குள் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவரின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் செந்தில் குமாரின் உடலுக்கு சிஆர்பிஎஃப் சார்பில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது அவரின் 14 வயது மகள் ஸ்ரீதன்யா கண்ணீர் மல்க சல்யூட் அடித்து தந்தைக்கு வீர வணக்கம் செலுத்தினார். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Tags : #CRPF #CRPFJAWAN #DAUGHTER #TRIBUTE #FATHER #CHENNAI