'பச்சக் குழந்தைனு கூட பாக்காம'.. 'மிருகத் தனமாக தாக்கும் தந்தை'.. மிரளவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 30, 2019 06:21 PM

மும்பையில் தந்தை ஒருவர் தனது குழந்தையை கொடூரமாகத் தாக்குவதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

police searches for a man who assaulted a baby in brutal way

மும்பையில், பார்ப்பதற்கு படித்தவராய் நாகரிகமாய்த் தோன்றும் ஒருவர், குழந்தையின் தந்தை என்று சொல்லப்படும் அவர், அந்த குழந்தையைப் போட்டு ஈவு இரக்கமின்றித் தாக்குவது போலான வீடியோ ஒன்று சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகி, பார்ப்பவர்களை மிரட்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலருக்கும் கண்கள் கலங்காமல் இல்லை.

மும்பையின் சுனபட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஏரியாவில் இருந்து இந்த வீடியோ வெளியானதாகக் கூறப்படும் நிலையில், அந்த போலீஸ் நிலைய போலீஸ் அதிகாரிகள், இந்த வீடியோ தங்கள் கையில் கிடைத்தவுடன் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறியுள்ளனர்.

இதுபற்றி பேசிய அந்த காவல் நிலைய, காவலர் அதுல் அருத்கர், அந்த குழந்தையை அத்தனை ரண கொடூரமாக தாக்கும் அந்த நபர், உண்மையில் அந்த குழந்தையின் தந்தை தானா என்பதும்,  அவர் ஏன் அந்த குழந்தையை அவ்வாறு அடித்துள்ளார் என்பதும் அவரை கண்டுபிடித்து விசாரித்த பின்னரே தெரியவரும் என்றும் அதற்கான நடவடிக்கையில்தான் காவல்துறை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : #BIZARRE #BABY #MAN #FATHER