'வாங்கப்பா சுஜித்தை தூக்கலாம்'.. 'டிவி நியூஸ் பார்த்துவிட்டு'.. 'அடம் பிடிக்கும் சிறுவன்'.. கலங்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 27, 2019 06:32 PM

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் 3 நாட்களாக நடந்துகொண்டிருக்கின்றன.

\'Dad, come lets bring back sujith\', TN little boy viralvideo

இந்தியா முழுவதும் உள்ள பிரபலங்கள் பலரும் சுஜித் நலமுடன் மீட்கப்படவேண்டும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை தீபாவாளியை பொருட்படுத்தாமல், அமைச்சர்கள் சிலர், தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணி செய்யும் ஊழியர்கள் என பலரும் சுஜித்தை மீட்க ஓய்வின்றி முயற்சித்து வருகின்றனர்.

இணையதளத்தில் சுஜித்தின் இந்த நிலைக்காக பரிதாபப்பட்டும், இறைவனை வேண்டியும் பலரும் உருகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில், சிறுவன் ஒருவன் தனது வீட்டில் சுஜித் பற்றிய செய்தியை டிவியில் பார்த்துவிட்டு, தனது தந்தையின் வாகன சாவியை எடுத்துக்கொண்டு,  ‘வாங்கப்பா சுஜித்தை கூட்டிட்டு வரலாம்’ என்று அப்பாவை தரதரவென இழுக்கிறான்.

அவனது தந்தையோ? சுஜித்தை மீட்கத்தான் அங்கே பலரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவனை மீட்டதுமே நாம் கூட்டி வந்துவிடலாம். குழிக்குள் இருக்கும் அவனை நாம் எப்படிப்பா மீட்க முடியும்? என்று ஆறுதல் சொல்ல முயல்கிறார். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்கிற பழமொழியை நினைவுபடுத்தும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #VIDEOVIRAL #PRAYFORSUJITH #SAVESUJITH #LITTLE BOY #FATHER