‘12 வயது சிறுமி கூறியதைக் கேட்டு’... ‘அதிர்ந்து போன ஆசிரியர்... ‘வீட்டில் தந்தை, நண்பர்களால் நேர்ந்த கொடூரம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Sep 25, 2019 11:08 AM

கேரளாவில் தந்தையின் அனுமதியுடன், அவரது நண்பர்கள் 30 பேரால், 12 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man Arrested For Allowing 30 Men To Rape His 12 YO Daughter

மலப்புரம் மாவட்டம் செல்லேரி பகுதியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். பள்ளிக்கு வந்தாலும், ஒருவித மனக் கலக்கத்துடனே அவர் இருந்துள்ளார். இதை கவனித்த சிறுமியின் ஆசிரியர், பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளார். பின்னர், இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பிலிருந்து, குழந்தைகள் நல அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த மாணவி கூறியதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து போயினர்.

‘கடந்த 2 ஆண்டுகளாக அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தன் தந்தை உட்பட, அவரது நண்பர்கள் எனப் பலரும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகும். சுமார் 30 வயதை தாண்டிய, 30-க்கும் மேற்பட்டோர், கடந்த 2 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்’ என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு’ திருரங்காடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைப்பெற்று வருகின்றது. இதற்கிடையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, கடந்த சனிக்கிழமையன்று குழந்தைகள் நலக் குழு (CWC) மலப்புரம் முன் ஆஜர்படுத்தப்பட்டு, குலந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SEXUALHARRASSMENT #KERALA #FATHER