'27 வழக்கு.. அதுல 8 கொலைவழக்கு '.. சென்னையில் சிக்கிய பிரபல தாதா.. காவல்துறை எடுத்த அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 24, 2019 09:28 PM

சென்னை கொரட்டூரில் விழுப்புரம் தாதா மணிகண்டன் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

viluppuram rowdy manikandan encountered in chennai

கொரட்டூரில் பதுங்கி இருந்த மணிகண்டனை கைது செய்ய விழுப்புரம் போலீசார் முற்பட்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், விழுப்புரம் தனிப்படையினரை தாக்கியதை தொடர்ந்து தாதா மணிகண்டன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 27 வழக்குகள் ரவுடி மணிகண்டனின் மீது நிலுவையில் இருக்கும் நிலையில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படைதான் தாதா மணிகண்டன் சென்னை கொரட்டூரில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தது.

ஆனால், விழுப்புரத்தில் இருந்து வந்த தனிப்படையினர், தாதா மணிகண்டனால் தாக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் தற்காப்புக்காக ரவுடி மணிகண்டன் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #VILUPPURAM #MANIKANDAN #ROWDY #ENCOUNTER #POLICE #CHENNAI