'ஊட்டி குளிரில் நடுங்கிய நிலையில்'... 'பிறந்து 2 மணிநேரமே ஆன ஆண்குழந்தை'... 'அதிர்ச்சியான பெண்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 07, 2019 10:20 PM

பிறந்து 2  மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை, உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகில் வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newborn baby rescued in Ooty Government Botanic Gardens

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ளது அரசு தாவரவியல் பூங்கா. அங்கு தோடர் குடியிருப்பு  பகுதிக்குச் செல்லும் வழியில், அடர்ந்த மரங்கள் காணப்படும். இந்தப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, காலை 8 மணியளவில், பெண்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்கள், அங்கு சென்று பார்த்தபோது, மரத்தின் அடியில் குளிருக்கு நடுங்கிய நிலையில், பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அழுதபடி  கேட்பாரற்று கிடந்தது.

இதையடுத்து, போலீசாருக்கு புகார் கொடுத்ததுடன், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த மருத்துவக் குழுவினர், குழந்தையை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். பிறந்து 2 மணி நேரமே ஆன, 2.5 கிலோ எடை உள்ள அந்த ஆண்குழந்தை, உடல்நலம் தேறியதும், குழந்தைநல பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என்று சுகாதாரத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பச்சிளம் குழந்தையை வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : #NEWBORN #BABY #OOTY #BOTANICGARDENS