தூங்கும் பெண்கள் தலையில் ‘கல்லை’ போட்டுக் கொலை.. திருப்பூரை நடுங்க வைத்த ‘சைக்கோ’ கொலையாளி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 05, 2020 11:47 AM

திருப்பூரில் நள்ளிரவு நேரத்தில் பெண்களின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tiruppur women murder with stone by psycho killer police arrested

திருப்பூர் மாவட்டம் ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி ஜோதிலட்சுமி என்பரின் தலையில் மர்மநபர் ஒருவர் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்து வருவதற்குள் ஜோதிலட்சுமியின் மருமகள் கலைவாணியின் தலையிலும் கல்லால் பழமாக அடித்துள்ளார். அடுத்தடுத்து பெண்களின் அலறல் சத்தம் கேட்கவும் அக்கம்பக்கத்தினர் பதறியடித்து வந்தனர்.

ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியுள்ளார். அங்கிருந்து தப்பிய அவர் மற்றொரு வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணின் தலையில் கல்லை போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெயலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து கொலை முயற்சி நடந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதனை அடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்த ஜோதிலட்சுமி மற்றும் கலைவாணி ஆகியோரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பெண்களின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சைக்கோ கொலையாளி ஆரோக்கியராஜ் என்பவரை உடுமலையில் வைத்து கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #POLICE #TIRUPPUR #WOMEN #PSYCHO