‘அம்மா என்ன பாரும்மா.. எழுந்துவாம்மா’!.. கதறி அழுத 4 வயது குழந்தை.. கிராமத்தை கண்ணீரில் உறைய வைத்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்த தாயின் சடலத்தைப் பார்த்து குழந்தை கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Ariyalur woman commits suicide due to family problem Ariyalur woman commits suicide due to family problem](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/ariyalur-woman-commits-suicide-due-to-family-problem.jpg)
அரியலூர் மாவட்டம் பழூர் அருகே உள்ள தேவமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மேந்திரன். இவரது மனைவி சுகன்யா (27). இந்த தம்பதியருக்கு பவ்யா (4), கிரண்யா (4 மாதம்) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக சுகன்யா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து தனது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி சுகன்யாவின் தந்தை ஆறுமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் நடந்து 4 வருடங்களே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இறந்த தாயின் சடலைத்தைப் பார்த்து குழந்தை பவ்யா, ‘அம்மா என்ன பாரும்மா.. எழுந்துவாம்மா’ என கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்துள்ளது. மறுபுறம் 4 மாத கைக்குழந்தை பாலுக்காக அழுத சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)