‘கொரோனா’ பயத்தால்... போலீசாருக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘கணவர்’... மனைவிக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸிற்கு பயந்து தனது மனைவியை ஒருவர் பாத்ரூமில் அடைத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பாவின் லிதுவேனியா நாட்டில் உள்ள பெண் ஒருவர் இத்தாலியிலிருந்து வந்த சீனப்பெண் ஒருவரைச் சந்தித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் வீட்டிலிருந்த தன் கணவரிடம் கூற, அதைக் கேட்டதும் அவர் உடனடியாக டாக்டருக்கு போன் செய்து ஆலோசனை கேட்டுள்ளார்.
அப்போது மருத்துவர் அவரிடம் மனைவியைத் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது மனைவியை வீட்டின் பாத்ரூமிற்குள் அனுப்பி கதவை அடைத்துள்ளார். அதன்பிறகு மனைவி எவ்வளவோ தட்டியும் அவர் கதவைத் திறக்காமல் இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பயந்துபோன மனைவி போலீசிற்கு போன் செய்து நடந்ததைக் கூற, அதிர்ச்சியடைந்த அவர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு போலீசார் அந்தப் பெண்ணின் கணவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். கொரோனாவிற்கு பயந்து மனைவியை கணவர் பாத்ரூமிற்குள் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
