‘வெளிய கூட்டிட்டு போய்ட்டு வரேன்’... நம்பி ‘4 குழந்தைகளையும்’ அனுப்பிய ‘தாய்’... ‘தந்தை’ கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ போலீசார்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 07, 2020 12:01 AM

தெலுங்கானாவில் தந்தையே தனது 3 மகள்களையும் நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Telangana Father Drowns 3 Daughters In Lake Sits On Bodies

தெலுங்கானா மாநிலம் கமரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஃபயாஸ் என்பவர் சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது மனைவியை பணத்திற்காக துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் தனது 4 குழந்தைகளையும் அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் சகோதரன் வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளார்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை ஃபயாஸ் தனது மனைவியையும், குழந்தைகளையும் அழைத்துச் செல்வதற்காக அங்கு சென்றுள்ளார். ஆனால் அப்போது அவருடன் செல்ல மறுத்த அவருடைய மனைவி, சூதாட்டத்தை கைவிட்டு திருந்தினால் மட்டுமே உடன் வருவேன் எனக் கூறியுள்ளார். அதன்பிறகு அவரிடம் கண்டிப்பாக வேலைக்குச் செல்வதாக உறுதியளித்த ஃபயாஸ் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்கிறேன் எனக் கேட்டுள்ளார். அவருடைய மனைவியும் அதை நம்பி குழந்தைகளை அவருடன் அனுப்பி வைத்துள்ளார்.

அதன்பிறகு சிறிது நேரம் கழித்து அழுதபடியே வீடு திரும்பிய அவர்களுடைய மகன், தந்தை தன்னையும் தன் 3 சகோதரிகளையும் மீண்டும் அடித்து துன்புறுத்தியதாகக் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஓடிச் சென்று ஃபயாஸுடன் சென்ற மற்ற 3 குழந்தைகளையும் தேடத் தொடங்கியுள்ளனர். பின்னர் காலை 11 மணியளவில் ஃபயாஸ் ஈரமான துணிகளுடன் ஏரி அருகே இருந்து வருவதைப் பார்த்த அவர்கள் அவரிடம் குழந்தைகள் குறித்துக் கேட்டுள்ளனர்.

அதற்கு ஃபயாஸ் சரியாக பதிலளிக்காமல் மழுப்ப, பதறிப்போன குடும்பத்தினர் போலீசாருக்கு உடனடியாக இதுபற்றி தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரால் ஏரியில் இருந்து 3 குழந்தைகளையும் சடலங்களாகவே மீட்க முடிந்துள்ளது. இதையடுத்து ஃபயாஸிடம் விசாரித்தபோது அவர், மனைவியின் மீதான கோபத்தில் 3 மகள்களையும் நீரில் மூழ்கடித்துக் கொலை செய்ததாகவும், அவர்கள் பிழைத்துவிடாமல் இருக்க நீரில் மூழ்கடித்து அவர்களுடைய உடல்களின் மீது அமர்ந்து கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

Tags : #CRIME #MURDER #TELANGANA #MONEY #FATHER #DAUGHTERS #SON #HUSBAND #WIFE