நண்பர்களோடு ‘சிக்கிய’ காதலன்... ‘16 வயது’ சிறுமிக்கு நேர்ந்த ‘பரிதாபம்’... விசாரணையில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 10, 2020 07:02 PM

குஜராத்தில் காதலனுடன் தனிமையில் இருந்த வீடியோ பகிரப்பட்டதால் 16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

16 YO Girl Commits Suicide After Boyfriend Leaks Intimate Video

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் நேற்று மாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில், காதலனுடன் தனிமையில் இருக்கும் வீடியோ பகிரப்பட்டதாலேயே மனமுடைந்து சிறுமி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்த சிறுமியின் காதலனும், அவருடைய 3 நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #SCHOOLSTUDENT #GUJARAT #GIRL #BOYFRIEND #VIDEO