"பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும் தெரியுமா?..." "நிஜமாகவே செய்து காண்பித்த பெண்கள்..." ஒரே ஒருநாள் தான்... ஸ்தம்பித்துப் போன நகரம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 11, 2020 03:02 PM

இந்த உலகுக்கு பெண்களின் தேவை எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில், மெக்சிகோவில் பெண்கள் இல்லாத தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

mexican women stay home to protest femicides in a day

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்களுக்கு சம உரிமை வேண்டியும் உலகம் முழுவதும் பல்வேறு இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மெக்ஸிகோவில் சற்று வித்தியாசமாக 'பெண்கள் இல்லாத தினம்' கடைப்பிடிக்கப்பட்டது.

நேற்று ஒரு நாள் முழுவதும் பெண்கள் அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லாமல் புறக்கணித்தனர். இதனால் சாலைகளில் பெரும்பாலும் ஆண்களையே காண முடிந்தது. பெண்களின் இந்தப் புறக்கணிப்பால் நாடே ஸ்தம்பித்துப் போனது.

பெண்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கடைகள் மற்றும் வீடுகளின் வாயில்களில் பர்ப்பிள் வண்ண ரிப்பன்களை ஒட்டியிருந்தனர். 

பாலியல் மற்றும் குடும்ப வன்முறையால் மெக்ஸிகோவில் ஆண்டுக்கு 3,825 பெண்கள் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெண்கள் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

Tags : #MEXICO #WOMEN #STAY HOME #PROTEST #FEMICIDES