எல்லா 'தியேட்டரையும்' இழுத்து மூடுங்க... 'அதிரடி' உத்தரவு பிறப்பித்த அரசு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 10, 2020 06:11 PM

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்ததை அடுத்து, தியேட்டர்களையும் மூடுமாறு கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Schools and Theaters remain closed in Kerala till March 31st

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளாவில் 12 பேரும், கர்நாடகாவில் 4 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 7-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பள்ளிகள், மதரசாக்கள், அங்கன்வாடிகள் ஆகியவை வருகின்ற 31-ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூடும்படி மாநில அரசு கேட்டுக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து இன்று மதியம் கொச்சியில் மலையாள திரையுலக அமைப்பினர் நடத்திய ஆலோசனையில் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை தியேட்டர்களை மூடிட முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல கர்நாடகாவிலும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 1 முதல் 5-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.