'ஐ.. ஊஞ்சல் இங்கதான் இருக்கா'... 'ஆசையைத் தீர்த்துக்கொண்ட திருடன்'.. பரபரப்பு வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Sep 18, 2019 03:58 PM
திருடச் சென்ற இடத்தில் ஊஞ்சல் ஆடிய திருடனின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விழுப்புரத்தின் சுதாகர் நகரில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இளங்கோவன் என்பவரது வீட்டுக்கு திருடன் ஒருவன் திருடச் சென்றிருக்கிறான். நன்றாக டிப்டாப்பாக சட்டை பேண்ட் அணிந்தபடி, அந்த வீட்டின் மாடியில் உள்ள லாபிக்குள் நுழையும் அந்தத் திருடன் இருட்டாக இருந்ததால், தன் செல்போனில் டார்ச் லைட் ஆன் செய்து அடித்துக் கொண்டே உள்ளே செல்கிறான்.
அதன் பிறகு அங்கு ஏதேனும் கிடைக்கிறதா என்று செல்போன் லைட்டை வைத்துக்கொண்டே தேடிப் பார்க்கிறான். மொட்டை அடித்துக்கொண்டு பிரஞ்ச் தாடி வைத்திருந்த அந்த திருடன், அங்கு தொங்கிக் கொண்டிருந்த மர ஊஞ்சலை பார்த்ததும் அதில் உட்கார்ந்து ஊஞ்சலாடும் ஆசை வந்துவிட்டது போல, உடனே தாமதிக்காமல் உட்கார்ந்து ஊஞ்சலாடிவிட்டு பின்னர் எழுந்து செல்கிறான்.
ஆனால் வீட்டில் எந்த ஒரு பொருளும் திருடுபோகவில்லை. பூட்டும் உடைக்கப்படவில்லை, அதனால், வாகனங்களில் இருக்கும் பெட்ரோலை திருடுவதற்காக இந்தத் திருடன் வந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில், விழுப்புரம் தாலுகா காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
இதனை சிசிடிவி வீடியோவில் பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர், ‘அக்கா.. இவன் ஒரு சைகோக்கா’ என்று கூறுகிறார். அதுவும் அந்த வீடியோவில் பதிவாகியதை அடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
