‘முன்விரோதத்தில் மூண்ட பகை’ ‘டீ கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய குடும்பம்’ பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 17, 2019 10:06 PM

முன் விரோதம் காரணமாக குடும்பத்துடன் டீ கடை ஊழியரை தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Tea master attacked by group of people in villupuram

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள  டீ கடையில் அரவிந்த் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.  இவர் கடந்த 1 -ம் தேதி தமது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு, பெருமாள் என்பவருக்கு சொந்தமான தள்ளு வண்டி  உணவகத்தில் சாப்பிட்டு உள்ளார். அப்போது ஏற்கனவே தர வேண்டிய பாக்கி பணம் தொடர்பாக தள்ளு வண்டி கடையின் உரிமையாளர் பெருமாள் என்பவருக்கும், டீ கடையில் வேலை செய்துவரும் அரவிந்த என்பவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக உணவக உரிமையாளர் பெருமாள் என்பவரது மனைவின் மூலமாக திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் வழக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த வழக்கின் காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடையில் அரவிந்த என்பவர் வேலை செய்துகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கே வந்த பெருமாள் மற்றும் அவரது உறவினர்கள் 5 -க்கும் மேற்பட்டவர்கள் அரவிந்த்தை கடுமையாக தாக்கி உள்ளனர்.

இது கடையில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. கடுமையாக தாக்கப்பட்டதில் காயமடைந்த அரவிந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பெருமாள் என்பரவது மகன் கணேஷை போலிசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை போலிசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் டீ கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #CCTV #VILLUPURAM #TEAMASTER #ATTACKED #FAMILY