'கடல்லயே இல்லயாம்' மொமண்ட்.. அதான் இப்படி எறங்கிட்டேன்.. வழக்கறிஞர் செய்த வைரல் காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Sep 18, 2019 02:24 PM
ராஜ்கோட் பார் கவுன்சிலின் தலைவரும் வழக்கறிஞருமான கோபால் திருவேதி, புதிய மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தின் முக்கிய விதியான கட்டாய ஹெல்மெட் அணிவதை பின்பற்ற முடியாததால், எடுத்துள்ள முடிவு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்த சட்டத்தால் அப்பகுதியில் ஹெல்மெட்கள் விற்றுத்தீர்ந்துள்ளன. இதனால் ஹெல்மெட்டுகள் கிடைப்பதே குதிரை கொம்பாக மாறியுள்ளது. ஆகையால், ஹெல்மெட்டின் விலை 400 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக உயர்ந்ததாகவும், ஒருநாளைக்கு 300 ரூபாய் சம்பாதிப்பவர் எப்படி இத்தனை விலை கொடுத்து ஹெல்மெட் வாங்க முடியும் அல்லது ஹெல்மெட் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதத்தொகையை தினமும் கட்ட முடியும் என்பதுதான் கோபால் திருவேதிக்குள் எழுந்த கேள்வி.
அதுமட்டுமல்லாம நகரங்கள், பெரிய பரபரப்பான சாலைகள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்டவற்றில் ஹெல்மெட் அணிய வேண்டியிருக்கலாம். ஆனால் 20-25 கிமீ வேகத்தில், 2, 3 நிமிடங்களில் செல்லக் கூடிய இடங்களுக்கெல்லாம் ஹெல்மெட் அணிவது சிரமம் என்றும், தவிர அப்பகுதியில் ஐஎஸ்ஐ முத்திரை கிடைப்பதே இல்லை என்றும் தான் உட்பட நிறைய பேர் சைக்கிளுக்கு மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
