'மைக்ரோ' நொடியில் காப்பாற்றப்பட்ட சிறுவன்.. த்ரில்லிங் 'வீடியோ' உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 15, 2019 11:44 AM

ஒவ்வொரு நொடியும் எவ்வளவு முக்கியம் என்பது ஒருசில சம்பவங்களின் வழியாகத்தான் நமக்குத் தெரியவரும். சில நேரங்களில் ஆபத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் உதவி பார்ப்பவர்கள் மனதையும் கண்டிப்பாக நெகிழச் செய்யும்.அந்த வகையில் சிறுவன் ஒருவன் காப்பாற்றப்பட்ட சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

 

Police saves boy life at the last minute,Video Here!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நான்கு வழிச்சாலை அமைந்துள்ள இடத்தில், காவலர் ஒருவர் போக்குவரத்தை சரிசெய்து கொண்டிருக்கிறார். அப்போது சிறுவன் ஒருவன் சைக்கிளில் அவருக்கு பின்னால் வந்து சாலையைக் கடக்க முயற்சி செய்கிறான்.ஆனால் தனக்கு முன்னால் லாரி வருவதை அவன் கவனிக்கவில்லை. இதைக்கண்ட காவலர் சற்றும் யோசிக்காமல் நொடிப்பொழுதில் அவனை இழுத்துக் காப்பாற்றுகிறார்.

 

தொடர்ந்து போக்குவரத்து விதிகள் குறித்து எடுத்துக்கூறி, பாதுகாப்பாக செல்லுமாறு அவனுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கிறார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சமயோசிதமாக செயல்பட்ட காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags : #POLICE #CCTV