'செயினையா அறுக்க பாக்குற'...'புரட்டி எடுத்த இளம்பெண்கள்'...'நண்பனை தனியா விட்டு எஸ்கேப்'...வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 03, 2019 04:56 PM

செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவரை 2 பெண்கள் துணிச்சலுடன் பிடித்து நகையை மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Brave Delhi Woman Catches Hold Of Chain Snatcher video goes viral

டெல்லியில் உள்ள நாங்லோய் என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி, இரு இளம் பெண்கள் சைக்கிள் ரிக்சாவில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயற்சித்தனர். அப்போது அந்த வழியே ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 பேர் இரு பெண்களின் அருகில் சென்றனர். அப்போது பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறித்தார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ந்து போனார். அந்த நேரத்தில் பைக்கை வேகமாக ஓட்டி இருவரும் தப்பிக்க முயற்சி செய்தார்கள்.

இந்நிலையில் உடனே சுதாரித்து கொண்ட இரு பெண்களும் பைக்கில் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரை பிடித்து இழுத்து தாக்கினார்கள். அந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் நிலைதடுமாறி கீழே விழ, தன்னுடன் வந்த நபரை விட்டுவிட்டு அந்த நபர் தப்பி ஓடினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், சிக்கிய இளைஞரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

இதனிடையே நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை பெண்கள் துணிச்சலுடன் பிடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.