'துப்பாக்கியுடன் வந்து அலறவிட்ட கொள்ளையர்கள்'.. பட்ட பகலில் துணிகரம்.. வங்கியில் நடந்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Sep 09, 2019 02:46 PM
பட்ட பகலில் ராஜஸ்தானின் வங்கி ஒன்றில் முகமூடிக் கொள்ளையர்கள் துணிகர செயலில் ஈடுபட்டு கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
ராஜஸ்தானில் உள்ள சிகர் மாவட்டத்திற்குட்பட்ட கிராமப் புறத்தில்தான் இந்த கொள்ளை நடந்துள்ளது. அங்கிருக்கும் ஊரக வங்கி ஒன்றில் திடீரென புகுந்த 4 கொள்ளையர்கள் அந்த வங்கியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு, 1.3 லட்சத்தை திருடிக்கொண்டு தப்பியுள்ளனர்.
இந்த பகல் கொள்ளையில், வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணத்தைப் பறித்துச் சென்றுள்ள சம்பவமும் சிசிடிவி கேமராவில் பதிவானதோடு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, அவர்கள் அனைவரும் ஹரியானாவுக்கு தப்பி ஓடியிருக்க வாய்ப்புள்ளதாக போலீஸார் கருதுகின்றனர்.
இதனையடுத்து, இத்தனை பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் சட்டம், ஒழுங்குகளையும் மீறி கொள்ளையர்கள் நுழைந்தது எப்படி என காவல்துறை மேலதிகாரிகள், அப்பகுதி காவல்துறையினரை கேள்வி கேட்டுள்ளனர்.