‘பணி முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது’... 'கர்ப்பிணிக்கு நேர்ந்த பயங்கரம்'... 'நூலிழையில் நடந்த வீடியோ காட்சிகள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Sep 01, 2019 05:01 PM
திருப்பூரில் கல்லூரிப் பேருந்து மோதி கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
திருப்பூர் - தாராபுரம் சாலை ரேணுகா நகர் பகுதியில், குடியிருந்து வரும் கௌசல்யா - ரமேஷ் தம்பதியர், டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் தனித்தனியாக பணியாற்றி வருகின்றனர். கௌசல்யா மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளநிலையில், கடந்த சனிக்கிழமை மாலை பணி முடிந்து இருவரும் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது குமரன் சாலையில் எம்.ஜி.ஆர். சிலை சிக்னலில், தனியார் கல்லூரிப் பேருந்து மோதி தம்பதி இருவரும் கீழே விழுந்தனர்.
பேருந்து மோதிய வேகத்தில் கீழே விழுந்த அவர், பேருந்தின் பக்கவாட்டு பகுதியில் விழுந்ததால், நூலிழையில் உயிர் தப்பினார். உடனடியாக அருகிலிருந்த பொது மக்கள் அவரை மீட்டனர். கை மற்றும் இடுப்பு பகுதிகளில் லேசான காயத்துடன் கர்ப்பிணியாக உள்ள கௌசல்யா, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். திருப்பூர் வடக்கு போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பிணி பெண் விபத்தில் நூலிழையில் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.